தேரோட்டத்துக்கு 260அடி நீளமுடைய வடக்கயிறு தயார்
மணப்பாறையை அடுத்த புத்தாநத்தம் அருகே கருமலை ஹரிகிரி வரதராஜ பெருமாள் கோயில் வைகாசி திருவிழா தேரோட்டத்துக்கு 260 அடி நீளமுடைய வடக்கயிறு சிங்கம்புணரியில் தயாரானது. இங்குள்ள சேவுக பெருமாள் கோயில் ரத வீதியில் 50க்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் ஒன்றரை டன் எடை கொண்ட 1, 200 கயிறுகளை பயன்படுத்தி கடந்த 10நாட்களாக விரதமிருந்து இப்பணியில் ஈடுபட்டனர். அதனை தொடர்ந்து நேற்று சரக்கு வாகன மூலம் நேற்று கருமலை வந்தடைந்தது.