திருச்சி மாவட்டம் முசிறியில் காவிரியின் வடகரையில் பரிசல் துறை சாலையில் ஸ்ரீ கற்பூரவல்லி அம்மன் உடனுறை ஸ்ரீ சந்திரமௌலீஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தில் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு பைரவருக்கு சிறப்பு யாகங்கள் நடைபெற்றது. பின்னர் பால், தயிர், பன்னீர், சந்தனம், பஞ்சாமிர்தம், யாக தீர்த்தம் உள்ளிட்ட பல்வகை திரவியங்கள் கொண்டு பைரவருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் பைரவருக்கு வெள்ளிக்கவசம் அணிவிக்கப்பட்டு மலர் அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு அருள் பாலித்தார். உலக நன்மைக்காகவும், மக்கள் நோய் நொடி இன்றி வாழவும், மாணவ மாணவிகள் கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கவும், விவசாயம் செழிக்கவும் சிறப்பு பிரார்த்தனை செய்யப்பட்டது.
பின்னர் மகா தீபாராதனை காட்டப்பட்டு பிரசாதமும், அன்னதானமும் வழங்கப்பட்டது. சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி வழிபாடு செய்தனர்.