
திருச்சி: மாயமான செல்போன் ஒரு மணி நேரத்தில் மீட்பு
திருச்சி துவாக்குடி முத்துராமலிங்க தேவர் சாலையைச் சேர்ந்தவர் ராஜா. இவரது மகள் சங்கவி. இவர் அண்ணா வளைவு பகுதியில் பூ வாங்க சென்றபோது இவரது செல்போன் மாயமானது. இதுகுறித்து சங்கவி துவாக்குடி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் துவாக்குடி போலீசார் மனு ரசீது வழங்கி மாயமான செல்போனை தேடி வந்தனர். இந்த நிலையில் செல்போன் மாயமான பகுதியில் டவர் லொகேஷன் வைத்து தேடிய போது அண்ணா வளைவு பகுதியில் விநாயகர் கோவில் குப்பை பகுதியில் கிடந்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து செல்போனை கைப்பற்றிய போலீசார் சங்கவி இடம் ஒப்படைத்தனர். செல்போன் மாயமாகி ஒரு மணி நேரத்தில் கண்டுபிடித்து செல்போனை பறிகொடுத்த இளம் பெண்ணிடம் ஒப்படைத்ததை கேள்விப்பட்ட அப்பகுதி மக்கள் எஸ். ஐ நாகராஜனை பாராட்டினர்.