முசிறியில் புகையிலை கடத்தலில் ஈடுபட்ட இருவர் மீது குண்டாஸ்

68பார்த்தது
முசிறியில் 460 கிலோ போதை புகையிலை கடத்தலில் ஈடுபட்ட இருவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

திருச்சி மாவட்டம், முசிறி போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்லதுரை தலைமையிலான போலீசார் கடந்த 30. 1. 2025 அன்று தந்தை பெரியார் பாலத்தில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்த போது முன்னுக்குப் பின் முரணாக பேசியதுடன் தடுப்பு கம்பிகளை இடித்துவிட்டு தப்பினர். பின்னர் போலீசார் துரத்தி சென்று காரை மடக்கி பிடித்தனர். காரை சோதனையிட்டபோது 460 கிலோ தமிழக அரசால் தடை செய்யப்பட்டுள்ள போதை புகையிலை இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து இந்த கடத்தல் சம்பவம் தொடர்பாக போலீசார் 7 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்தநிலையில் போதை புகையிலை பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் திருச்சி மாவட்டம், லால்குடி தாலுகா தச்சங்குறிச்சியை சேர்ந்த மணிராஜ் திண்டுக்கல் மாவட்டம், பாலகிருஷ்ணபுரத்தை சேர்ந்த தங்கமாயன் ஆகிய இருவரையும் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் சிறையில் அடைப்பதற்கு திருச்சி மாவட்ட எஸ். பி செல்வநாகரத்தினம் பரிந்துரையின் பேரில் திருச்சி மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார் உத்தரவிட்டார்.
பின்னர் திருச்சி மத்திய சிறையில் உள்ள மணிராஜ், தங்கமாயன் இருவரும் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டதற்கான உத்தரவினை போலீசார் வழங்கினர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி