ரம்ஜான்: சமயபுரம் ஆட்டுச்சந்தையில் ரூ. 2 கோடிக்கு விற்பனை

62பார்த்தது
திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் ச. கண்ணனூர் பேரூராட் சிக்கு உட்பட்ட பகுதியில் ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை ஆட்டுச் சந்தை நடைபெறும். இங்கு சராசரியாக குறைந்த பட்சம் 25 லட்சத்தில் இருந்து 50 லட்சம் ரூபாய் வரை ஆடுகள் விற்பனையாகும்.

ரம்ஜான், பக்ரீத், தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட பண்டிகை காலங் களில்சுமார் ரூ. 1 கோடியிலிருந்துரூ. 2 கோடி வரை ஆடுகள், அதன் எடை, தரத்திற்கேற்ப விற்பனையாகும்.

இந்நிலையில், நாளை (திங்கட்கிழமை) ரம்ஜான் பண்டிகை என்பதால் ஆடுகளை விற்பனை செய்வதற்காக நூற்றுக்கணக்கான ஆட்டு வியா பாரிகள் நேற்று அதிகாலை 4. 30 மணியில் இருந்தே ஆடுகள் விற்ப னைக்கு கொண்டுவரப்பட்டன. திருச்சி, கரூர், அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, சேலம், கெங்கவல்லி, ஆத்தூர், விருதுநகர், கள்ளக்கு றிச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஆடுகள் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டன. ஆடுகளை அதன் எடைக்கு ஏற்ப பேரம் பேசி வாங்கி சென்றனர். ஒரு ஆடு சுமார் ரூ. 7 ஆயிரத்திலிருந்து ரூ. 15 ஆயிரம் வரை விலை போனது. வழக்கமாக வியாபாரிகள் கொண்டு வரும் ஆடுகளின் எண்ணிக்கையை விட அதிக மான அளவில் நேற்று சந்தைக்கு வந்தன. ஆடுகளை வாங்க அதிக அளவில் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் வந்தனர்.

இதனால் ஆட்டுச்சந்தை களைக்கட்டியது. நேற்று நடந்த சந்தையில் சுமார் ரூ. 2 கோடி வரை ஆடுகள் விற்பனை நடைபெற்றது. இதனால் வியாபாரிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி