துறையூர் அருகே சைக்கிள் மீது டிராக்டர் மோதி ஒருவர் சாவு

74பார்த்தது
துறையூர் அருகே உள்ள உப்பிலியபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட எஸ்என். புதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் முதியவர் பொன்னையன் வயது 60. சம்பவம் நடந்த நேற்று அப்பகுதியில் தனது சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர் திசையில் வந்த டிராக்டர் ஒன்று அவருடைய சைக்கிள் மீது மோதி விபத்து ஏற்பட்டதில் கீழே விழுந்து காயமடைந்த பொன்னையன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த உப்புலியபுரம் போலீசார் பொன்னையனின் உடலை மீட்டு துறையூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்த விபத்தை ஏற்படுத்திய ட்ராக்டர் ஓட்டுநரான எஸ்என் புதுரை சேர்ந்த பிரசாந்த் என்பவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி