தற்காலிக பட்டாசுக் கடைகள் விண்ணப்பம்.. ஆட்சியர் முக்கிய அறிவிப்பு
தீபாவளி பண்டிகை அக்டோபர் 31-ந் தேதி கொண்டாடப்படுகிறது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, திருச்சி மாவட்டத்தில் தற்காலிக பட்டாசு கடைகள் வைக்க விரும்புவோர், விதி எண் 84-ல் தெரிவிக்கப்பட்டுள்ள நிபந்தனைகளின்படி இணையதளம் வழியாக மட்டும் அடுத்த மாதம் 24-ந் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து இ- சேவை மையங்களிலும் மேற்படி விண்ணப்பங்களை இணையதளம் வாயிலாக பதிவேற்றம் செய்யலாம். விண்ணப்பத்துடன், விண்ணப்பதாரரின் பாஸ்போர்ட் அளவு புகைப்படம், இருப்பிட முகவரிக்கான ஆதாரம், கடை வைக்கப்படும் முகவரிக்கான ஆதாரம், பான் கார்டு, ஆதார் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுனர் உரிமம், உரிமக்கட்டணம் ரூ. 500-ஐ இ- சலான் மூலம் பாரத ஸ்டேட் வங்கியில் செலுத்திய செலுத்து சீட்டு அசல், சொந்தகட்டிடம் எனில் பட்டா நகல், வாடகை கட்டிடம் எனில் வாடகை ஒப்பந்த பத்திரம் குத்தகை நிலம் எனில் குத்தகை ஆவணம் இணைக்கப்பட்டிருக்க வேண்டும். மேற்கண்ட விண்ணப்பங்களை அடுத்தமாதம் 24-ந் தேதிக்குள் இணையதளம் வாயிலாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். அதன்பிறகு பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.