திருச்சி: குழந்தைகளுக்கு ஜாதி சான்றிதழ் கேட்டு இருளர்பெண் மனு

74பார்த்தது
திருச்சி மாவட்டம் லால்குடி அருகே புள்ளம்பாடி ஒன்றியத்தில் உள்ள வந்தலை கூடலூர் பகுதியில் சேர்ந்தவர் சத்யா அருள்.

இருளர் சமூகத்தை சேர்ந்த சத்யா கூலி வேலைகள் செய்து வருகிறார் இவருக்கு நான்கு குழந்தைகள் உள்ளனர். அதில் அபிநயா ஆறாம் வகுப்பு, ஹாசினி நான்காம் வகுப்பு, ஆகாஷ் இரண்டாம் வகுப்பும், அஸ்வின் அங்கன்வாடியிலும் படித்து வருகிறார்கள். நான்கு பேருக்கும் ஏற்கனவே கடந்த 2022 ஆம் ஆண்டு ஜாதி சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்திருந்த நிலையில் இதுவரை ஜாதி சான்றிதழ் அவர்களுக்கு வராமல் உள்ளது. ஜாதி சான்றிதழ் இல்லாததால் அவர்கள் சமூகத்திற்கு கிடைக்க வேண்டிய உதவிகள் எதுவும் கிடைக்காமல் உள்ளது எனவே இந்த நான்கு குழந்தைகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு அவர்களுக்கு உடனடியாக ஜாதி சான்றிதழ் வழங்க வேண்டும் என சத்திய அருள் திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார் மனுவை வாங்கி கொண்ட ஆட்சியர் பிரதீப் குமார் மீண்டும் ஜாதி சான்றிதழ் விண்ணப்பிக்கும் மாறும் ஜாதியை சான்றிதழை உடனடியாக வழங்குவதற்கான ஏற்பாடுகளை செய்து தருவதாகவும் தெரிவித்தார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி