தூத்துக்குடி |

ஆராய்ச்சி பட்டம் பெறுவது குறித்து கருத்தரங்கம்

தூத்துக்குடியில் இந்தியன் சோசியாலஜிக்கல் சொசைட்டி மற்றும் கோலி கிராஸ் ஹோம் சயின்ஸ் கல்லூரி சார்பில் ஆராய்ச்சி பட்டம் மற்றும் முனைவர் பட்டம் மேற்கொள்ளும் மாணவர்களுக்கான சிறப்பு கருத்தரங்கம் நடைபெற்றது. இந்த கருத்தரங்கில் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த பேராசிரியர்கள் கலந்து கொண்டு கலை இலக்கியம் அறிவியல் வரலாறு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் மாணவர்கள் எவ்வாறு எளிதாக முனைவர் பட்டம் மற்றும் ஆராய்ச்சி பட்டம் மேற்கொள்ளலாம் என எடுத்து கூறினர். 10 நாட்கள் நடைபெற்ற இந்த சிறப்பு கருத்தரங்கில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்கள் மற்றும் இந்தோனேசியா, இலங்கை, பங்களாதேஷ், உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து வந்திருந்த ஆராய்ச்சி மாணவர்கள் கலந்து கொண்டு பயன்பட்டனர்.

வீடியோஸ்


தமிழ் நாடு