ஓட்டப்பிடாரம் - Ottapidaram

மைசூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் புகையிலை பொருட்கள் பறிமுதல்

தூத்துக்குடியில் மைசூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் கொண்டு வந்த சுமார் ரூ. 1. 62லட்சம் மதிப்புள்ள புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். மைசூர் - தூத்துக்குடி இரயில் வண்டியில் அசோக் மற்றும் மனோஜ் என்ற பெயரில் பார்சலை பெங்களூரிலிருந்து இரயிலில் புக் செய்து அனுப்பி வைக்கப்பட்டது. அதனை தூத்துக்குடி இரயில் நிலையத்தில் 1 வது நடைமேடையில் இரயில் வந்து நின்றதும் பார்சல் அலுவலக ஊழியர்கள் இறக்கும்போது சந்தேகத்தின் பேரில் அலுவலில் இருந்த ஜிஆர்பி/ ஆர்பிஎப் காவலர்களிடம் தகவல் கூறினர். இதையடுத்து போலீசார் பார்சலை சோதனை செய்து பார்த்தபோது சுமார் 160 கிலோ கணேஷ் & கூல் லிப் புகையிலை மதிப்பு சுமார் ரூ. 1, 62, 680என உறுதிசெய்யப்பட்டது. அதனை உரிமை கொண்டாடி யாரும் வரவில்லை இதனால் இன்று மாலை தூத்துக்குடி மாவட்ட உணவு பாதுகாப்புதுறை அதிகாரியிடம் ரயில்வே பாதுகாப்பு படை மற்றும் ரயில்வே காவல் துறையினர் முன்னிலையில் ஒப்படைக்கப்பட்டது.

வீடியோஸ்


కరీంనగర్ జిల్లా