திருச்செந்தூர் - Thiruchendur

தூத்துக்குடி: பைக் மீது கார் மோதல்; வாலிபர் பலி

தூத்துக்குடி: பைக் மீது கார் மோதல்; வாலிபர் பலி

ஆத்தூர் அருகே பைக் மீது கார் மோதிய விபத்தில் வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார். அவரது நண்பர் படுகாயம் அடைந்தார். கன்னியாகுமரி மாவட்டம், மண்டைக்காடு பகுதியைச் சேர்ந்தவர் ராஜ் மகன் ஜினு (38). தல்லாகுளத்தை சேர்ந்த ஐயப்பன் மகன் ராஜன் (40). இவர்கள் 2 பேரும் நண்பர்கள். இருவரும் நேற்று (அக்.,7) தூத்துக்குடி - திருச்செந்தூர் மெயின் ரோட்டில் பைக்கில் சென்று கொண்டிருந்தனர். ஆத்தூர் அடுத்துள்ள கொழுவை நல்லூர் கிராமம் அருகே சென்றபோது எதிரே வந்த கார் பைக் மீது மோதியது. இவ்விபத்தில் பலத்த காயம் அடைந்த 2பேரும், தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் ஜினு பரிதாபமாக இறந்தார். ராஜன் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து ஆத்தூர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் மாரியப்பன் வழக்குப் பதிந்து, காரை ஓட்டி வந்த முக்காணியைச் சேர்ந்த ஐயப்பன் மகன் ராமச்சந்திரன் (34) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

வீடியோஸ்


కరీంనగర్ జిల్లా