புனித வெள்ளி அன்று மதுக்கடைகளை மூட வேண்டும்; கோரிக்கை!

61பார்த்தது
புனித வெள்ளியை முன்னிட்டு ஏப். 18ம் தேதி மதுக்கடைகளை மூட வேண்டும் என்று தமிழக அரசுக்கு பரிசுத்த அமலோற்பவ மாதா மதுவிலக்கு சபை கோரிக்கை விடுத்துள்ளது.


இது தொடர்பாக தூத்துக்குடி மறைமாவட்டம் அமலோற்பவ மாதா மதுவிலக்கு சபை இயக்குநர் அருட்தந்தை ஜெயந்தன் மற்றும் நிர்வாகிகள் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் அளித்துள்ள கோரிக்கை மனுவில், "வருகிற மார்ச் 5ஆம் தேதி கிறிஸ்தவர்களின் தவக்காலம் ஆரம்பமாகிறது. இயேசு இறந்த புனித வெள்ளி (ஏப். 18ம் தேதி) தினத்தை தியாகம் மற்றும் அமைதியின் நாளாக கிறிஸ்தவ மக்கள் கடைபிடித்து வருகின்றனோம்.  


ஆகவே, ஏப். 18ம் தேதி அனைத்து மதுக்கடைகளையும் மூட தமிழக அரசு உத்தரவு பிறப்பிக்க வேண்டும். "காந்தி ஜெயந்தி, திருவள்ளுவர் தினம், மகாவீரர் ஜெயந்தி, மிலாடி நபி, வள்ளலார் நினைவு. சுதந்திர தினம், குடியரசு தினம், மற்றும் உழைப்பாளர் தினம்”, போன்ற சிறப்பு நாள்களோடு புனித வெள்ளி நாளையும் சேர்த்து சட்ட மன்றத்தில் கொள்கை மாற்றம் செய்ய தமிழ்நாடு அரசுக்கு பரிந்துரைக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி