தூத்துக்குடி: முதல்வர் மருந்தகம் துவக்க விழா; ஆட்சியர் பங்கேற்பு

50பார்த்தது
தூத்துக்குடி: முதல்வர் மருந்தகம் துவக்க விழா; ஆட்சியர் பங்கேற்பு
தூத்துக்குடி மாவட்டம் உட்பட தமிழகம் முழுவதும் 1,000 முதல்வர் மருந்தகங்களை முதல்வர் மு.க. ஸ்டாலின் காணொலி வாயிலாக திறந்து வைத்தார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சென்னை, கோட்டூர்புரம், அண்ணா நூற்றாண்டு நூலக கலையரங்கில் இன்று கூட்டுறவுத் துறை சார்பில் தமிழ்நாடு முழுவதும் 1000 "முதல்வர் மருந்தகங்களை" காணொலி வாயிலாக திறந்து வைத்து, விழாப் பேருரையாற்றினார். 

அதைத் தொடர்ந்து தூத்துக்குடி மாவட்டத்தில் புதுக்கோட்டை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் முதல்வர் மருந்தகத்தை மீன்வளம்-மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் மாவட்ட ஆட்சியர் க. இளம்பகவதி தலைமையில் குத்துவிளக்கேற்றி பார்வையிட்டார். இந்நிகழ்ச்சியில், ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி. சண்முகையா, மேயர் பெ. ஜெகன், கூட்டுறவுச் சங்கங்களின் இணைப் பதிவாளர் ராஜேஷ், சரக துணைப்பதிவாளர்கள் மு. கலையரசி (தூத்துக்குடி), இ.ரா. இராமகிருஷ்ணன் (கோவில்பட்டி), செல்வி இ.ரா. சக்தி பெமிலா (திருச்செந்தூர்) மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்தி