தூத்துக்குடி வ உ சி துறைமுக ஆணையம் இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் "தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் மொத்த சரக்குகளை கையாளும் தளங்களான வடக்கு சரக்குதளம் 2-ல் 120 டன் திறன் கொண்ட 2 நகரும் பளுதூக்கிகள் மற்றும் சரக்குதளம் 1 முதல் 5 வரை 3 நகரும் பளுதூக்கிகளும் சுழற்சி முறையில் செயல்பட்டு ஒரு நாளைக்கு 45,000 டன் சரக்குகளை வெளியேற்றுவதற்கு வசதியை பெற்றுள்ளது.
மேலும் மொத்த சரக்குகளை அதிகமாக கையாளுவதற்கு வசதியாக 240 மீட்டர் நீளமுடைய இணைப்பு கன்வேயர் செயலியை, தூத்துக்குடி அனல்மின் உற்பத்தி நிலையத்தின் கன்வேயர் செயலியுடன் இணைத்து நிலக்கரி சேமிப்புக்கிடங்கு வரை இணைக்கப்பட்டுள்ளது. இந்த புதிய செயலியின் மூலம் வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் நிலக்கரி கையாளும் திறன் வருடத்திற்கு 7 இலட்சமாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.