

தூத்துக்குடி: மக்களுக்கு பாதுகாப்பற்ற நிலைமை உருவாகிவிட்டது; டாக்டர் கிருஷ்ணசாமி
தூத்துக்குடியில் புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி செய்தியாளர்களை சந்தித்தார். ஆதி திராவிட தேவேந்திர குல மக்களுக்கான 18 சதவீத இட ஒதுக்கீட்டை சிதைக்க கூடாது, தமிழ்நாட்டு மக்களுக்கு பாதுகாப்பற்ற நிலைமை உருவாகிவிட்டது. தமிழகத்தில் ஒட்டுமொத்தமாக சமநிலை அற்ற நிலை நிலவுகிறது. தமிழக மக்கள் இந்த ஆட்சி மீதான நம்பிக்கையை இழந்து விட்டார்கள் என புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி குற்றஞ்சாட்டினார்.