ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அதிவேகமாக 200 விக்கெட்களை வீழ்த்திய இந்திய வேகப்பந்து வீச்சாளர் என்ற சாதனையை முகமது ஷமி படைத்துள்ளார். சாம்பியன் டிராபி தொடரில் வங்கதேசத்திற்கு எதிரான போட்டியின்போது இந்த சாதனையை அவர் படைத்தார். 34 வயதாகும் ஷமி இன்று விளையாடி வரும் போட்டி அவருக்கு 103 ஒருநாள் போட்டியாகும். இந்த போட்டியில் அவர் தற்போது வரை 4 விக்கெட்களை வீழ்த்தி அசத்தியுள்ளார்.