தூத்துக்குடி: எம்ஜிஆர் பிறந்த நாள்; சிவன் கோயிலில் அன்னதானம்

74பார்த்தது
தூத்துக்குடி மாவட்ட எம்ஜிஆர் மன்ற செயலாளர் எம். பெருமாள் ஏற்பாட்டின் பேரில் தூத்துக்குடியில் உள்ள பழமையான பாகம்பிரியாள் உடனுறை சங்கர ராமேஸ்வரர் ஆலயத்தில் பக்தர்களுக்கு சைவ விருந்து வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது சங்கர ராமேஸ்வரர் பாகம்பிரியாள் சுவாமியிடம் மீண்டும் அதிமுக ஆட்சி அமைய சிறப்பு வழிபாடு செய்தனர். இதில் அதிமுக முன்னாள் அமைச்சர், தெற்கு மாவட்ட கழகச் செயலாளர் சண்முகநாதன், அமைப்புச் செயலாளர் சின்னத்துரை ஆகியோர் கலந்து கொண்டு அன்னதானம் வழங்கினர். 

இந்த நிகழ்ச்சியில் மாநில அமைப்பு செயலாளர் என்.சின்னத்துரை, மாநில அமைப்பு சாரா ஓட்டுனர் அணி இணைச் செயலாளர் பெருமாள் சாமி, மாவட்ட அவைத்தலைவர் திருப்பாற்கடல், முன்னாள் மாவட்ட கூட்டுறவு சங்க தலைவர் சுதாகர், மாவட்ட அம்மா பேரவை இணைச் செயலாளர் திருச்சிற்றம்பலம், சிவா, மாநகராட்சி அதிமுக கொறடா வழக்கறிஞர் மந்திரமூர்த்தி, மாவட்ட இளம் பெண் பாசறை பொருளாளர் புல்லட் பரிபூரணராஜா, மாவட்ட வழக்கறிஞர் பிரிவு இணைச்செயலாளர் வழக்கறிஞர் சரவணன், வழக்கறிஞர் முனியசாமி, மாவட்ட அண்ணா தொழிற்சங்க ஆட்டோ ஓட்டுநர் நலச்சங்க தலைவர் நிலா சந்திரன், மாவட்ட இலக்கிய அணி நடராஜன், தகவல் தொழில்நுட்ப பிரிவு சொக்கலிங்கம், இம்ரான், கேகேபி விஜயன், எஸ்கே மாரியப்பன் உள்ளிட்ட ஏராளமான அதிமுக நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி