தென் இந்திய அளவிலான பெண்கள் கராத்தே போட்டிகள் திருச்சியில் நடைபெற்றது. தென் மாநிலங்களில் இருந்து 700க்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்து கொண்டனர். இந்த போட்டியில் தூத்துக்குடி சிலுவைபட்டி முத்து சிலம்பு கூடத்தைச் சேர்ந்த பவித்ரா, சஹானா, மரிய சியாமளா ஆகிய மூன்று மாணவிகள் கலந்து கொண்டனர்.
இவர்களில் சஹானா, மரிய சியாமளா ஆகிய இரண்டு பேரும் தங்கப்பதக்கம் வென்றும், பவித்ரா என்ற மாணவி வெண்கலப் பதக்கமும் பெற்று சாதனை படைத்துள்ளனர். மேலும் சஹானா, மரிய சியாமளா ஆகிய இரண்டு மாணவிகள் தேசிய அளவிலான போட்டிக்கு தேர்வாகியுள்ளனர். இதைத்தொடர்ந்து தூத்துக்குடி முத்து சிலம்பு கூடத்திற்கு வருகை தந்த மாணவிகளுக்கு கிராம மக்கள் சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது.
இதில் தாளமுத்து நகர் பங்குத் தந்தை பாலன் கலந்து கொண்டு மாணவிகளுக்கு பதக்கம் மற்றும் சான்றிதழ்களை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் சிலம்பம் பயிற்சியாளர் முனியசாமி, பெண் கராத்தே பயிற்சியாளர் தினேஷ் குமார் மற்றும் சிலுவைபட்டி ஊர் நிர்வாகிகள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.