தூத்துக்குடி: கப்பல் படையில் சேர்வதற்கு இலவச பயிற்சி
தமிழ்நாடு கடலோர பாதுகாப்பு குழுமம் காவல் கூடுதல் இயக்குனர் சஞ்சய்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழக அரசின் சார்பில் தமிழ்நாடு மீனவர்களின் வாரிசுகள் வாழ்வு மேம்பட இந்திய கப்பல்படை மற்றும் கடலோர பாதுகாப்பு படையில் (நவிக்) சேர்வதற்கு இலவச வழிகாட்டுதல் பயிற்சி நடைபெற உள்ளது. இப்பயிற்சி மீனவ இளைஞர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். இதுபோல் ஏற்கனவே மூன்று பயிற்சி வகுப்புகள் நடைபெற்று முடிக்கப்பட்டு மீனவ இளைஞர்கள் பயன்பெற்றுள்ளனர். இப்பயிற்சி கடலூர், இராமநாதபுரம், மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் கடலோர பாதுகாப்பு குழுமத்தின் சார்பாக மூன்று மாதங்கள் நடைபெறும். இப்பயிற்சியில் சேர்வதற்கு தகுதியான மீனவ இளைஞர்களிடம் இருந்து மனுக்கள் பெறப்பட்டு வருகின்றன. பயிற்சியின் போது தங்குமிடம், உணவு மற்றும் பயிற்சிக்கால ஊக்கத்தொகை வழங்கப்படும். இப்பயிற்சியில் சேர்வதற்கான படிவங்கள் கடல் காவல் நிலையங்கள், மீனவர்கள் சங்கங்கள், கடலோர பாதுகாப்பு குழுமம் ஆய்வாளர் அலுவலகம், ரேஷன் கடைகள் ஆகிய இடங்களில் கிடைக்கும். கல்வித் தகுதி/வயது வரம்பு: இப்பயிற்சியில் 18 வயது முதல் 22 வயது வரையும் ஆதிதிராவிடர்கள் மற்றும் பழங்குடியினருக்கு அரசின் விதிப்படி வயது வரம்பு தளர்வு அளிக்கப்படும்.