ஸ்ரீதேவி பூதேவி பிரகலாத வரதராஜ சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம்!

65பார்த்தது
தூத்துக்குடி புதுக்கோட்டையில் ரதசப்தமி விழாவை முன்னிட்டு ஸ்ரீதேவி பூதேவி சமேத பிரகலாத வரதராஜ சுவாமிக்கு திருமலை திருப்பதியில் நடைபெறுவது போன்று சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு

தூத்துக்குடி அருகே உள்ள புதுக்கோட்டையில் தென் திருவேங்கட பக்தர்கள் குழு சார்பாக ரத சப்தமி விழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது இதையொட்டி உலக நன்மை வேண்டி ஸ்ரீதேவி பூதேவியுடன் எழுந்தருளிய வரதராஜ சுவாமிக்கு திருமலை திருப்பதியில் நடைபெறுவது போன்று பால் தயிர் மஞ்சள் இளநீர் தேன் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது இதைத் தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் மற்றும் தீப ஆராதனைகள் நடைபெற்றது இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாளை வழிபட்டு சென்றனர்

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி