தூத்துக்குடி: விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்; போலீசார் சோதனை

80பார்த்தது
தூத்துக்குடி விமான நிலையத்திற்கு இன்று (ஜனவரி 23) காலை இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததை தொடர்ந்து தூத்துக்குடி விமான நிலையத்தில் வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய்கள் மூலம் தீவிர சோதனை நடத்தப்பட்டது.

தூத்துக்குடி விமான நிலையத்திற்கு இன்று காலை விமான நிலைய இயக்குனர் அலுவலகத்திற்கு ஈமெயிலில் பைப் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வந்ததை தொடர்ந்து தூத்துக்குடி விமான நிலையத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. 

தூத்துக்குடி, நெல்லை மாவட்டத்திலிருந்து வெடிகுண்டு நிபுணர்களுடன் வரவழைக்கப்பட்ட இரண்டு மோப்ப நாய்கள் மூலம் வெடிகுண்டு நிபுணர்கள் தீவிர சோதனை நடத்தினர். மேலும் விமான நிலையத்திற்குள் பயணிகள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர். பார்வையாளர்களுக்கு அனுமதி கிடையாது.

தொடர்புடைய செய்தி