தூத்துக்குடி திருவிக நகர் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் சக்திபீடத்தில் விவசாயம் வளம்பெற பெண்கள் இளநீர் அபிஷேகம் செய்து வழிபட்டனர். மேல்மருவத்தூர் ஆன்மிக குரு அருள்திரு பங்காரு அடிகளார் அம்மா அருளாசியுடன் தூத்துக்குடி திருவிக நகர் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் சக்திபீடத்தில் விவசாயம் வளம்பெற ஆயிரக்கணக்கான பெண்கள் இளநீர் அபிஷேகம் செய்து அன்னை ஆதிபராசக்தி அம்மனை வழிபட்டனர்.
விவசாயம் வளம்பெறவும், மக்கள் வளமுடன் வாழவும், தொழில் வளம் சிறக்கவும், தொற்று நோயிலிருந்து மக்களை காக்கவும் வேண்டி பெண்கள் இளநீர் அபிஷேகம் செய்து வழிபட்டனர். அபிஷேக நிகழ்ச்சியை கூட்டுறவு பண்டகசாலை பொதுமேலாளர் கந்தசாமி துவக்கி வைத்தார். தொடர்ந்து அன்னை ஆதிபராசக்திக்கு சக்திபீட பொருளாளர் அனிதா, மகளிர் அணி யசோதா ஆகியோர் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்து சிறப்பு தீபாராதனை செய்தனர். அருட்பிரசாதம், அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியை கோவில்பட்டி ஆதிபராசக்தி மன்ற தலைவர் அப்பாசாமி தொடங்கி வைத்தார்.