தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து ரேஷன் கடைகளுக்கும் நாளை மறுநாள் பிப்.22 விடுமுறை என தெரிவிக்கப்பட்டுள்ளது. பொங்கல் தொகுப்பை அனைவரும் விரைந்து பெற்றிட ஏதுவாக நாளை (ஜன.10) வெள்ளிக்கிழமை அனைத்து ரேஷன் கடைகளும் வழக்கம்போல் செயல்பட்டன. இந்த வேலை நாளை ஈடுகட்ட பிப்.22ம் தேதி விடுமுறை அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, பிப்.22ம் தேதி அனைத்து ரேஷன் கடைகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.