Uber பயண கட்டணம் தொடர்பாக ஆட்டோ ஓட்டுநர்களுக்கும், வாடிக்கையாளர்களுக்கும் இடையே தொடர்ந்து பிரச்சனை எழுவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், இந்த பிரச்னைகளை தீர்க்க Uber நிறுவனம் புதிய விதிகளை அறிமுகம் செய்துள்ளது. அதன்படி, “ஆட்டோ ஓட்டுநர்களுக்கு பணம் கொடுக்கும்போது, டிஜிட்டல் பேமெண்ட் முறையை பயன்படுத்த முடியாது. பயணத்திற்கான கட்டணம் தொடர்பான இறுதி முடிவை வாடிக்கையாளர், ஆட்டோ ஓட்டுநர் இருவரும் இணைந்து கலந்தாலோசித்து எடுக்க வேண்டும்” என தெரிவித்துள்ளது.