தூத்துக்குடி விமான நிலையத்தில் மூன்றடுக்கு பாதுகாப்பு

80பார்த்தது
குடியரசு தினம் வருகிற 26ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதை முன்னிட்டு விமான நிலையம், ரயில் நிலையம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. தூத்துக்குடி விமான நிலையத்திலிருந்து சென்னை மற்றும் பெங்களூருக்கு விமானங்கள் இயக்கப்படுகின்றன. குடியரசு தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி விமான நிலையத்தில் மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. காவல்துறை ஆய்வாளர் தலைமையில் 50 காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பயணிகள் விமான நிலையத்திற்குள் செல்லும்போது கடும் சோதனைக்குப் பின்பே அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். 

விமான நிலைய பயணிகளின் உடைமைகள் ஸ்கேன் செய்யப்பட்டும், பயணிகள் மெட்டல் டிடெக்டர் கருவிகள் மூலம் சோதனை செய்யப்பட்டு உள்ளே அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். மேலும் தூத்துக்குடி விமான நிலையத்தில் உள்ளே வருகிற 30ஆம் தேதி வரை விமான பயணிகளுடன் வரும் பார்வையாளர்கள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. மேலும் தூத்துக்குடி விமான நிலையத்திற்கு நேற்று வெடிகுண்டு மிரட்டல் வந்ததை தொடர்ந்து வெடிகுண்டு கண்டறியும் நிபுணர்களும் தூத்துக்குடி விமான நிலையத்தில் தயார் நிலையில் உள்ளனர்.

தொடர்புடைய செய்தி