தூத்துக்குடி: அந்தோணியார் ஆலயத் திருவிழா - திரளான கிறிஸ்தவர்கள் பங்கேற்பு!

83பார்த்தது
புளியம்பட்டி புனித அந்தோணியார் ஆலயத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான இன்று பெருவிழா ஆடம்பர கூட்டுத் திருப்பலி நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே உள்ள புளியம்பட்டி புனித அந்தோணியார் திருத்தலம் அமைந்துள்ளது. 

திருத்தலம் தென்னகத்து புதுவை என அனைத்து மக்களாலும் போற்றப்படும் புண்ணிய பூமியான புளியம்பட்டி புனித அந்தோணியார் திருத்தல ஆண்டுப் திருவிழா கடந்த 30-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழா தொடர்ந்து 13 நாட்களாக நடைபெற்றது. திருவிழாவை முன்னிட்டு காலை மற்றும் மாலையில் திருப்பலி நடைபெற்றது. கத்தோலிக்க கிறிஸ்தவ திருத்தலம் என்றாலும், அனைத்து சமயத்தினரும் வந்து வழிபடும் தலமாக உள்ளது. திருவிழாவின் முக்கிய நிகழ்வான இன்று காலை திருத்தலப் பெருவிழா ஆடம்பர கூட்டுத் திருப்பலியை பாளையங்கோட்டை மறைமாவட்ட ஆயர் அந்தோணிசாமி தலைமையில் வெகு விமர்சையாக நடைபெற்றது. 

திருவிழா திருப்பலிக்கு தூத்துக்குடி, நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி, விருதுநகர், மதுரை மற்றும் பல மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக திருவிழாவை முன்னிட்டு காலை புனித அந்தோணியார் திருவுருவம் தாங்கிய சப்பர பவனி நடைபெற்றது. அப்போது பக்தர்கள் நேர்த்திக் கடனாக உப்புயை தூவியும், கும்பிட்டு சரணம் போட்டு இறைமக்கள் தனது நேர்த்திக்கடனை செலுத்தினர்.

தொடர்புடைய செய்தி