ஓட்டப்பிடாரம் - Ottapidaram

மணியாச்சி: தீயணைப்பு துறை சார்பில் தீத்தொண்டு வாரம் விழிப்புணர்வு

மணியாச்சி: தீயணைப்பு துறை சார்பில் தீத்தொண்டு வாரம் விழிப்புணர்வு

மணியாச்சியில் தீத்தொண்டு வாரத்தை முன்னிட்டு தீ விபத்துக்களை தவிர்ப்பது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. தமிழ்நாடு தீயணைப்பு மீட்புப் பணிகள் துறையின் சார்பாக தீத்தொண்டு வாரத்தை முன்னிட்டு ஓட்டநத்தம், சுதாராணி ஸ்வீட்ஸ் ஸ்னாக்ஸ் தொழிற்சாலையில் தீ விபத்துக்களை தவிர்ப்பது, தீயணைப்பான்கள் மூலம் தீயை அணைப்பது, காயம் அடைந்தவர்களை மீட்பது குறித்த செயல் முறை விளக்க ஒத்திகை பயிற்சி நடத்தப்பட்டது.  இதில், மணியாச்சி காவல் ஆய்வாளர் ஜார்ஜ் முன்னிலையில், ஓட்டப்பிடாரம் நிலைய அலுவலர் கார்த்திகேயன் தலைமையில் ஏட்டு ரெஜி மற்றும் தீயணைப்பு வீரர்கள் கலந்து கொண்டனர். மேலும், விழிப்புணர்வு பிரச்சார துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன. இதில் ஸ்வீட்ஸ் உரிமையாளர் கணேசன் மற்றும் தொழிற்சாலை பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

வீடியோஸ்


కరీంనగర్ జిల్లా