இந்தியாவில் பலரும் காய்ச்சல், தலைவலி, உடல்வலி என எதுவாக இருந்தாலும் பாராசிட்டமால் மாத்திரையை பயன்படுத்துகின்றனர். ஆனால் இந்த மாத்திரையை அடிக்கடி பயன்படுத்துபவர்களுக்கு இதய செயலிழப்பு, சிறுநீரக செயலிழப்பு, ரத்த அழுத்தம் போன்ற அபாயங்கள் ஏற்படுவது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. நீண்டகாலம் பாராசிட்டமால் பயன்படுத்தினால் சிறுநீரக நோய்கள் 19%, இதய செயலிழப்பு 9%, உயர் ரத்த அழுத்தம் 7% அதிகரிப்பதாக ஆய்வு சுட்டிக்காட்டுகிறது