இந்தியாவிலேயே இந்தியை எதிர்ப்பதில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. இந்தி என்பது ஒரு மொழி மட்டுமே. அது அறிவு கிடையாது. தேவைப்படுபவர்கள் இந்தியை கற்றுக் கொள்ளலாம். ஆனால் அதை திணிப்பது அவசியமற்றது. இந்தியை தமிழ் மீது திணித்தால், இறுதியில் தமிழ் தன்னுடைய தனித்தன்மையை இழந்து விடும். இந்தி வார்த்தைகள் மிகுந்து தமிழின் தன்மையே மாறிவிடும். இதன் காரணமாகவே தமிழர்கள் தொடர்ந்து இந்தியை எதிர்த்து வருகின்றனர்.