தூத்துக்குடி தை அமாவாசை தினத்தை முன்னிட்டு தூத்துக்குடியில் உள்ள பிரத்தியங்கரா தேவி ஆலயத்தில் நடைபெற்ற ஒரு லட்சத்து 8 எலுமிச்சை யாக சிறப்பு பூஜையில் பிக் பாஸ் நிகழ்ச்சி நடிகை பங்கேற்றார்.
தூத்துக்குடி அருகே உள்ள ஐயன் அடைப்பு பகுதியில் அமைந்துள்ள பிரத்யங்கிரா தேவி ஆலயத்தில் இன்று தை அமாவாசையை முன்னிட்டு உலக நன்மை விவசாயம் செழிக்க வேண்டி ஒரு லட்சத்து எட்டு எலுமிச்சை யாகம் நடைபெற்றது. இதையொட்டி பிரித்தியங்கரா தேவிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜை சீனிவாச சித்தர் தலைமையில் நடைபெற்றது.
இதைத்தொடர்ந்து ஒரு லட்சத்து எட்டு எலுமிச்சை பக்தர்களால் காணிக்கையாக செலுத்தப்பட்டு பின்னர் அவை பூஜை செய்யப்பட்டு யாகசாலையில் போடப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். இந்த பூஜையில் வெளிநாட்டினர் மற்றும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகை தர்சா குப்தா உள்ளிட்டோர் கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்தனர்.