தூத்துக்குடி: பிப். 20ல் விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம்

52பார்த்தது
தூத்துக்குடி: பிப். 20ல் விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம்
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முத்து அரங்கத்தில் வைத்து வருகிற 20ஆம் தேதி 'விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்' நடைபெற உள்ளது. இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் க. இளம்பகவதி வெளியிட்ட செய்திக்குறிப்பில், "2025-ம் ஆண்டு பிப்ரவரி மாதத்திற்கான 'விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்' 20.02.2025 அன்று காலை 10.00 மணியளவில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முத்து அரங்கத்தில் நடைபெற உள்ளது. எனவே தூத்துக்குடி மாவட்ட விவசாயப் பெருமக்கள் அனைவரும் இக்கூட்டத்தில் கலந்து கொண்டு விவசாயம் சம்பந்தபட்ட குறைகளைத் தெரிவித்து பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் கேட்டுக்கொண்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி