திருவிடைமருதூர் - Thiruvidaimarudur

தஞ்சாவூர்: தவறவிட்ட கைபேசி உரியவரிடம் ஒப்படைப்பு

தஞ்சாவூர்: தவறவிட்ட கைபேசி உரியவரிடம் ஒப்படைப்பு

தஞ்சாவூரில் ரயில் பயணத்தில் தவறவிட்ட கைபேசி, கும்பகோணத்தில் உரியவரிடம் ரயில்வே போலீசார் நேற்று ஒப்படைத்தனர். பெங்களூருவைச் சேர்ந்தவர் ஆனந்தராஜ் (60). இவர் மைசூர்-கடலூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏறி தஞ்சாவூருக்கு வந்தார். தஞ்சாவூர் ரயில் நிலையத்துக்கு வந்தபோது, கவனக்குறைவால் பயணித்த பெட்டியிலேயே கைபேசியை மறந்து வைத்து விட்டு இறங்கினார்.  அதே ரயிலில் பயணம் செய்த மற்றொருவர் கைபேசியை அடுத்த நிலையமான கும்பகோணம் நிலையத்தில் ஒப்படைத்தார். இதையடுத்து கும்பகோணம் ரயில்வே உதவி ஆய்வாளர்கள் தனலட்சுமி, செந்தில்வேலன் ஆகியோர் கைபேசியை தவறவிட்ட நபரை தொடர்பு கொண்டு அவரை வரவழைத்து கைபேசியை ஒப்படைத்தனர்.

வீடியோஸ்


ఆదిలాబాద్ జిల్లా