சாலையில் ஏற்படும் விபத்துகளில் சிக்கியவர்கள் மீட்டு, மருத்துவமனையில் சேர்ப்போருக்கு ரூ.25,000 வழங்கப்படும் என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். விபத்தில் சிக்கியவர்கள் அருகே சென்றாலே போலீசார் நமது மீதும் வழக்குப் பதிவு செய்துவிடுவார்கள் என்ற அச்சத்தில் யாரும் அவர்களை காப்பாற்ற முன்வருவதில்லை. இந்த போக்கை மாற்றுவதற்காக இந்த புதிய முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், உதவி செய்தவர்களுக்கு போலீசார் எந்த தொந்தரவும் கொடுக்கக் கூடாது எனவும் உத்தரவிடப்பட்டுள்ளார்.