விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.

83பார்த்தது
தஞ்சை மாவட்டம், திருவிடைமருதூர் தாலுக்கா, எஸ். புதூரில் உள்ள அரசுக்கு சொந்தமான நாயக்கர் குளத்தை ஆக்கிரமிப்பு செய்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கக்கோரி எஸ். புதூர் கடைவீதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் தஞ்சை வடக்கு மாவட்ட செயலாளர் முல்லை வளவன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்தில் எஸ் புதூரில் இருந்து சாத்தனூர் செல்லும் சாலையை சீரமைக்க வேண்டும், அரசுக்கு சொந்தமான இடங்களை தாரை வார்த்த அதிகாரிகள் மீது நடவடிக்கைகள் எடுக்க வேண்டும், மூன்று மாவட்டங்கள் சந்திப்பு இடமான எஸ். புதூர் கடைவீதியில் மக்களின் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும், ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள நாயக்கர் குளத்தை மீட்டு மக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும் உள்ளிட்ட கோரிக்கை வைக்கப்பட்டன. இதில் விசிகவை சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து திருவிடைமருதூர் வட்டாட்சியர் பாக்கியராஜ் தலைமையில் வருவாய் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி விரைவில் இவர்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என உத்தரவு அளித்தனர்‌.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி