உடலில் ஹார்மோன் மாற்றங்கள் ஏற்படும் பொழுது மனிதர்கள் உடலுறவு கொள்ளும் திறன் கொண்டவர்களாக மாறுகின்றனர். பெண்களுக்கு 7 முதல் 13 வயதுக்குள்ளும், ஆண்களுக்கு 9 முதல் 15 வயதுக்குள்ளும் இந்த மாற்றங்கள் ஏற்படுகிறது. இந்தியாவில் திருமண வயது பெண்களுக்கு 18 வயதாகவும், ஆண்களுக்கு 21 வயதாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் கணவன் மற்றும் மனைவிக்கு இடையில் 3 - 5 ஆண்டுகள் இடைவெளி இருப்பது நல்லது என மருத்துவர்கள் கூறுகின்றனர்.