பாஜக ஆட்சி இல்லாத மாநிலங்களுக்கு நிதி வழங்காமல் புறக்கணிக்கும் மத்திய அரசை தொடர்ந்து எதிர்ப்போம் என கர்நாடக மாநில துணை முதல்வர் சிவக்குமார் பேட்டி.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள ஸ்ரீ பிரத்யங்கிரா தேவி கோயிலில் வியாழக்கிழமை சுவாமி தரிசனத்திற்கு கர்நாடக மாநில துணை முதல்வர் சிவக்குமார் வந்தார். சுவாமி தரிசனம் முடிந்த பின் கோயில் வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த துணை முதல்வர் சிவக்குமார், மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சியின் அரசு எதிர்கட்சியினர் ஆளும் மாநிலங்களுக்கு வழங்கப்படும் நிதிகளை முறையாக வழங்கவில்லை.
மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடந்து நிதி வழங்காமல் புறக்கணிப்பு செய்கிறது. எதிர்கட்சிகளாகிய நாங்கள் மத்திய பாரதிய ஜனதா கட்சி ஆட்சியை எதிர்த்து தொடர்ந்து போராடுவோம் என்றார்.