தெப்பத்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

55பார்த்தது
நாச்சியார்கோவில் சீனிவாசபெருமாள் திருக்கோவில்
இத்தலத்தில் ஒவ்வொரு ஆண்டும் மார்கழி மாத முக்கோடி தெப்பத்திருவிழா பத்து தினங்கள் நடைபெறுவது வழக்கம். அதன்படி இவ்வாண்டிற்கான விழா இன்று காலை உற்சவர் சீனிவாசபெருமாள் வஞ்சுளவள்ளி தாயார் சிறப்பு மலர் அலங்காரத்தில் கொடிமரம் அருகே எழுந்தருள, பட்டாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் ஜபிக்க, நாதஸ்வர மேளதாள மங்கள வாத்தியங்கள் இசைக்க, கொடி மரத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்து, கருடாழ்வார் சின்னம் வரையப்பட்ட திருக்கொடியை பட்டாச்சாரியார்கள் கொடிமரத்தில்
ஏற்றி வைக்கப்பட்டு கொடிமரத்திற்கும், உற்சவர் பெருமாள் மற்றும் தாயாருக்கும் நட்சத்திர ஆர்த்தி செய்யப்பட்டது. இந்த விழாவில் கோயில் செயல் அலுவலர் பிரபாகரன், கோயில் பட்டாச்சாரியார்கள், கோயில் ஊழியர்கள் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

தொடர்ந்து தினமும் காலை, மாலை என இருவேளைகளும் சூரியபிரபை, யாழி, கிளி, சேஷ, அனுமந்த, கமல, வெள்ளி யானை, குதிரை என பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதி உலா நடைபெறுகிறது. விழாவில் முக்கிய நிகழ்வான கல்கருட சேவை வருகிற ஜனவரி 6ம் தேதி மாலையும், 10ம் தேதி அதிகாலை வைகுண்ட ஏகாதேசியையொட்டி சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியும், தொடர்ந்து 11ம் தேதி இரவு பெருமாள் தாயார் தெப்பத்தில் எழுந்தருள தெப்போற்சவம் வெகுவிமரிசையாக நடைபெறுகிறது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி