திருப்பதி கோயிலில் தீ விபத்து.. தெறித்து ஓடிய பக்தர்கள்

59பார்த்தது
திருப்பதி கோயிலில் தீ விபத்து.. தெறித்து ஓடிய பக்தர்கள்
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் லட்டு விநியோகம் செய்யும் கவுன்ட்டரில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. லட்டு விநியோகம் செய்யும் வளாகத்தில் உள்ள 47ஆம் நம்பர் கவுன்ட்டரில் உள்ள யுபிஎஸ்-ல் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது. கவுண்டரில் இருந்து கரும்புகை வெளிவருவதை பார்த்த பக்தர்கள் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற தேவஸ்தான மின்துறை ஊழியர்கள், மின்விநியோகத்தை நிறுத்தி யுபிஎஸ் இணைப்பை துண்டித்தனர்.

தொடர்புடைய செய்தி