தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே அம்மாசத்திரம் கடைவீதியில் சிவசேனா கட்சி புதிய அலுவலகம் திறப்பு விழா சிவசேனா கட்சியின் மாநில துணைத்தலைவர் பூக்கடை எஸ். ஆனந்த் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் அகில பாரத மக்கள் கட்சி தலைவர் பாபு பரமேஸ்வரன், பாரதிய ஜனதா கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் சோழா. ராஜன், பாரதிய ஜனதா கட்சியின் தஞ்சை வடக்கு மாவட்ட செயலாளர் பசும்பொன் பாண்டியன், தேமுதிக தஞ்சை மாவட்ட செயலாளர் சங்கர் ஆகியோர் கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி திறந்து வைத்தனர். அதனைத் தொடர்ந்து சிவசேனா கட்சி அலுவலகத்தில் பூஜைகள் செய்து சிறப்பு வழிபாடு செய்யப்பட்டு ஏழை எளியோர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
இதில் அகில பாரத இந்து மகா சபா மாநில பொதுச் செயலாளர் செந்தில் முருகன், இந்து மக்கள் கட்சி மாநில பொதுச் செயலாளர் குருமூர்த்தி, சிவசேனா மாநில செய்தி தொடர்பாளர் வைத்தியலிங்கம், இந்து புரட்சி முன்னணி மயிலாடுதுறை மாவட்ட தலைவர் குமரன், சிவசேனா கட்சி தஞ்சை வடக்கு மாவட்ட தலைவர் வெங்கடேஷ், தஞ்சை மண்டல தலைவர் உதயகுமார், குடந்தை மாநகரச் செயலாளர் அரவிந்த் மற்றும் நிர்வாகிகள் தொண்டர்கள் என பலர் கலந்து கொண்டனர்.