கார்த்தி கல்வி நிறுவன தலைவர் தயாரிக்கும் திரைப்படம்

51பார்த்தது
கும்பகோணம் கார்த்தி வித்யாலயா கல்வி நிறுவனத்தின் தலைவர் டாக்டர் எஸ். ஏ. கார்த்திகேயன் தனது மகள் அகஸ்தி-க்காக "குண்டான் சட்டி" என்ற அனிமேஷன் படம் ஒன்றை தயாரித்து திரைப்படத்துறையில் கால் பதித்தவர். கார்த்திகேயன் தயாரித்த அனிமேஷன் படம் வெற்றி பெற்றதோடு, 54 விருதுகளை பெற்றுள்ளது. தனது மகளை இள வயதில் இயக்குனர் ஆக்கி அழகு பார்த்தவர் டாக்டர் எஸ் ஏ கார்த்திகேயன்.
மேலும் அந்த அனிமேஷன் படம் பள்ளி, மாணவ மாணவிகள் மற்றும் திரைப்பட ரசிக பெருமக்கள் அனைவரையும் கவர்ந்த திரைப்படமாக திகழ்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் தனது இரண்டாவது படமாக எமன் கட்டளை என்ற படத்தை தயாரித்து, வரும் மாதத்தில் வெளியிட இருக்கிறார்.
இந்த நிலையில் நமது மாலை மலர் பொங்கல் மலருக்காக சிறப்பு பேட்டி அளித்துள்ளார் டாக்டர் எஸ். ஏ. கார்த்திகேயன்.
மேலும் எமன் கட்டளை திரைப்படம் எவ்வாறு எடுக்கப்பட்டது என்பது குறித்து ரத்தின சுருக்கமாக பேட்டியில் கூறினார்.
அதன் விவரம் வருமாறு: -
எஸ். ராஜசேகர் இயக்கத்தில், மறைந்த நடிகர் மயில்சாமியின் மகன் அன்பு நடிக்கும் படம் ‘எமன் கட்டளை’. இதில் சந்திரிகா கதாநாயகியாக நடிக்கிறார். இதில் அர்ஜூனன், ஆர். சுந்தர்ராஜன், நளினி, சார்லி, வையாபுரி, பவர்ஸ்டார், அனு மோகன், மதன்பாபு, சங்கிலி முருகன், கராத்தே ராஜா உள்பட பலர் நடிக்கிறார்கள். படத்தின் பாடல்களை சினேகன் எழுத என். எஸ். கே. இசையமைக்கிறார்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி