40 அடி உயரத்தில் பறக்கும் விமானங்களில் வைஃபை எவ்வாறு செயல்படுகிறது என்பதை என்றைக்காவது யோசித்திருக்கிறீர்களா? ஏர் டூ கிரவுண்ட் சிஸ்டம் மூலம் விமானத்தில் இன்டர்நெட் வசதி கிடைக்கிறது. விமானத்தில் பொருத்தப்பட்ட ஒரு ஆன்டனா தரையில் உள்ள டவரில் இருந்து சிக்னலை எடுத்துக் கொள்ளும். இருப்பினும் விமானம் கடல் அல்லது பாறைகள் வழியாக செல்லும் பொழுது இது வேலை செய்யாது. இது தவிர விமானத்தில் செயற்கைக்கோள் அடிப்படையிலான வைஃபை சிஸ்டம் வசதிகளும் உள்ளது.