8 முறை பல்டி அடித்த கார்.. உயிர் தப்பிய 5 பேர்

65பார்த்தது
ராஜஸ்தான்: நாகவுரில் நடைபெற்ற கோர விபத்தில் 5 பேர் அதிர்ஷ்டவசமாக தப்பித்த சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த சொகுசு கார் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சுமார் 8 முறை பல்டியடித்தவாறு, சாலையின் அருகில் உள்ள ஷோரூம் கேட்டில் பயங்கரமாக மோதியது. இதையடுத்து, காரில் இருந்து காயமின்றி ஒவ்வொருவராக வெளியே வந்தவர்கள் "ப்ளீஸ் ஒரு கப் டீ கிடைக்குமா?" என்று அங்கிருந்தவர்களிடம் கேட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி