சென்னை பெரும்பாக்கத்தில் தனது தந்தையின் மரணத்திற்கு தாய் வசந்தகுமாரி பிரிந்து சென்றதே காரணம் என எண்ணி மகன் ஆகாஷ் பெற்ற தாயை அரிவாளால் வெட்டியா சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து தனது தாயுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து வெட்டியதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், தலைமறைவாக உள்ள ஆகாஷை போலீசார் தேடி வருகின்றனர்.