மறைந்த தேமுதிக தலைவரும் நடிகருமான விஜயகாந்த் முதலாம் ஆண்டு நினைவு நாள் பேரணியில் பங்கேற்க அனைத்து கட்சிகளுக்கும் பிரேமலதா விஜயகாந்த் அழைப்பு விடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார். திமுக, அதிமுக, பாஜக, காங்கிரஸ், பாமக, மதிமுக உள்ளிட்ட அனைத்து கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். மேலும் திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட அனைத்து கட்சியினருக்கும் நேரில் அழைப்பு வழங்க உள்ளோம் என அவர் தெரிவித்துள்ளார்.