கடலூர் மாவட்டம் கொண்டூரில் வசித்து வரும் விக்ரமன் என்பவரது வீட்டில் ஒரு கட்டுவிரியன் பாம்பும், சாரைப்பாம்பும் புகுந்தது. இரண்டு பாம்புகளும் வீட்டில் இருந்த காலணிகள் கழற்றி வைக்கப்படும் இடத்தில இருந்த ஷூவுக்குள் புகுந்தது. இந்நிலையில், கட்டுவிரியன் பாம்பு சாரைப்பாம்பை அப்படியே உயிருடன் விழுங்கியது. இதுகுறித்த வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.