கோவை தடாகம் சாலையில் கணுவாய் அருகே உள்ள நர்சரி பகுதியில் சிலிண்டர்களை ஏற்றிச் சென்ற வேன் திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையின் நடுவே கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் நல்வாய்ப்பாக உயிர்ச்சேதம் ஏதும் ஏற்படவில்லை. வேன் கவிழ்ந்ததால் அதிலிருந்த சிலிண்டர்கள் சாலையில் உருண்டு ஓடின. இதையடுத்து அருகிலிருந்த பொதுமக்கள் துரிதமாக செயல்பட்டு சிலிண்டர்களை அப்புறப்படுத்தினர். இதுகுறித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. விபத்து குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.