
தஞ்சை: போதி யாத்திரை நூல் வெளியீட்டு விழா
எழுத்தாளர் ஆதலையூர் சூரியகுமார் எழுதிய போதி யாத்திரை நாவல் வெளியீட்டு விழா ஆடுதுறை அருகே உள்ள சாத்தனூர் திருக்கோயிலில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு திருபுவனம் ஆதிசக்தி ஞானபீடம் ஆசீவகத் தமிழ்ச் சித்தர் அருட்திரு அம்மா கண்ணன் அடிகள் தலைமை வகித்தார். கும்பகோணம் மிட் டவுன் ரோட்டரி சங்கத்தின் தலைவர் பொறியாளர் பிரபாகரன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். கண்ணன் அடிகள் நூலை வெளியிட கும்பகோணம் தங்கமயில் ஜுவல்லரி கிளை மேலாளர் சிவசுப்பிரமணியன் பெற்றுக் கொண்டார்.