மயிலாடுதுறை: மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிப்பு
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா தரங்கம்பாடி மற்றும் அதனைச் சுற்றியுள்ள 10க்கும் மேற்பட்ட மீனவர் கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர். இந்நிலையில் தற்போது வானிலை மையம் மற்றும் மீன்வளத்துறை சார்பில் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் பெரும்பாலான மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லவில்லை. தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.