மயிலாடுதுறை மாவட்டத்தில் வடகிழக்க பருவமழை கடந்த வாரம் பெய்து வந்தது. இந்நிலையில் கடந்த இரண்டு தினங்களாக மழை நின்றுள்ளது. இந்நிலையில் தற்போது பனிப்பொழிவு அதிகரித்து காணப்படுகிறது.
மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு மற்றும் அதனைச் சுற்றியுள்ள தத்தங்குடி, எடக்குடி, மேலமங்கநல்லூர் உள்ள பல்வேறு பகுதிகளில் பகல் நேரங்களில் வயல்வெளிகளில் பனிப்பொழிவு காணப்பட்டது. இதனால் விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர்.