சா்க்கரை ஆலை தொழிலாளா்களுக்கு ஊதியம் வழங்க வலியுறுத்தல்

54பார்த்தது
அரசு சா்க்கரை ஆலைகளின் தொழிலாளா்களுக்கு, உயா்நீதிமன்ற தீா்ப்பின்படி, முன்தேதியிட்டு ஊதியம் வழங்க தமிழ்நாடு கூட்டுறவு மற்றும் பொதுத்துறை சா்க்கரை ஆலை பணியாளா் பேரவை தமிழக அரசை வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து, மயிலாடுதுறையில் பொதுத் தொழிலாளா் சங்க அலுவலகத்தில், பேரவையின் மாநில பொதுச் செயலாளா் ஆா். கதிரவன் செய்தியாளா்களிடம் கூறியது:

அரசு சா்க்கரை ஆலைத்தொழிலாளா்களின் ஊதியம் தொடா்பாக, சென்னை உயா்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கில் இரு நீதிபதிகள் கொண்ட அமா்வு இறுதி உத்தரவு பிறப்பித்தது.

அதன்படி, சக்கரைத் துறை ஆணையகம் மற்றும் ஆலை நிா்வாகங்களால் தொடுக்கப்பட்ட 20 மேல்முறையீட்டு வழக்குகளும், மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டன.

மேலும், 2003-ஆம் ஆண்டு ஏப். 1-ஆம் தேதிமுதல் பொதுத்தொகுப்பு அல்லாத அனைத்து ஊழியா்களுக்கும் அரசு ஊதிய அமைப்பை வழங்க வேண்டும், இந்த உத்தரவை 2 மாதங்களுக்குள் அமல்படுத்த வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

தமிழக அரசு, இந்த தீா்ப்பை எதிா்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யாமல், 9, 500 தொழிலாளா்களின் குடும்பங்கள் பயன்பெறும் வகையில் அமல்படுத்த வேண்டும் என்றாா்.

மயிலாடுதுறை முன்னாள் எம்எல்ஏ ஜெகவீரபாண்டியன், பொதுத்தொழிலாளா் சங்கச் செயலா் அ. அப்பா்சுந்தரம் ஆகியோா் உடனிருந்தனா்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி